சீறிய ரஷ்யா.!உக்ரைனுக்கு படை அனுப்ப திட்டம் இல்லை: மக்ரோன் கருத்தால் பரபரப்பு
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் இல்லை என்று அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி பொன்ற முக்கிய நேட்டோ நாடுகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகின்ற நிலையில், ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் உக்ரைனுக்கு எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்குவது என்பதை கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.
France மக்ரோன் கருத்து
அந்த வகையில், சமீபத்தில் ஐரோப்பிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், "ரஷ்ய வெற்றியைத் தடுப்பதற்கான முயற்சியில் எந்த விருப்பத்தையும் விலக்குவதற்கு "மேற்கத்திய கூட்டணி நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
Reuters
இருப்பினும், இத்தகைய தலையீட்டிற்கு தற்போது எந்தவொரு ஒருமித்த சம்மதமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்ரோனின் இந்த கருத்துக்கு ரஷ்யா உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தரைப்படை வீரர்களை அனுப்புவது “நேட்டோவுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே மோதலுக்கு இட்டுச் செல்லும்" என்று எச்சரித்தார்.
நேட்டோவின் நிலைப்பாடு(NATO)
இந்நிலையில் ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டணி நாடுகள், உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் சாத்தியத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளன.
மக்ரோனின் கருத்துக்கு பதிலளித்த நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், நேட்டோ கூட்டணி நாடுகள் உக்ரைனுக்கு அபரிமிதமான ஆதரவை வழங்கி வருகின்றன. ஆனால், உக்ரைனில் நேட்டோவின் போர் வீரர்கள் இருப்பதற்கான எந்த திட்டமும் இல்லை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
NATO no troops Ukraine,
Macron Ukraine troops,
Russia NATO conflict Ukraine,
Ukraine war escalation,
NATO support Ukraine,
Russia criticizes Macron Ukraine,
Ukraine humanitarian crisis,
Western aid to Ukraine,
Will NATO send troops to Ukraine after Russia's invasion?,
Macron's call for troops in Ukraine: Risks and implications,
Russia warns of conflict with NATO over Ukraine troops,