முடி உதிர்வை தடுத்து முழங்கால் வரை வளர இந்த ஒரு ஹேர் மாஸ்க் போதும்
இன்றைய நாட்களில் முடி உதிர்வு என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.
முடி உதிர்வைக் குறைக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்.
தலைமுடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவும் இந்த ஹேர் மாஸ்க் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஷியா பட்டர் - 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- பாதாம் ஆயில்- 2 ஸ்பூன்
- கற்றாழை- 50g
செய்முறை
முதலில் ஒரு பவுலில் ஷியா பட்டர் சேர்த்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து ஷியா பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில், கற்றாழை ஜெல், உருக்கிய ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும்.
அதன்பின் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி உதிர்வை அடியோடு நிறுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |