சிறையில் கொல்லப்பட்ட நவல்னியை அடுத்து... அவரது மனைவியை வேட்டையாடும் ரஷ்யா
ரஷ்யாவில் சிறையிலேயே கொல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவிக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளாடிமிர் புடினின் ரஷ்ய அரசாங்கம்
தீவிரவாதக் குழு ஒன்றின் கூட்டத்தில் யூலியா நவல்னயா கலந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டு, இரண்டு மாதங்கள் தடுப்புக்காவல் ஆணையை பிறப்பித்துள்ளது மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம்.

அலெக்ஸி நவல்னி சிறையில் கொல்லப்பட்ட 5 மாதங்களுக்குப் பின்னர், அவரது மனைவி யூலியா நவல்னயாவை குறி வைத்துள்ளது விளாடிமிர் புடினின் ரஷ்ய அரசாங்கம். தமது கணவரின் இறப்புக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொறுப்பேற்க வேண்டும் என்றே யூலியா நவல்னயா தொடர்ந்து போராடி வருகிறார்.
பொதுவாக ரஷ்ய நீதிமன்றங்களால் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் குழுக்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்படுவது வாடிக்கையாகவே நடந்து வருகிறது.
இது ஆளும் அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. நவல்னி இறப்புக்கு பின்னர் ரஷ்யாவுக்கு வெளியே வெளிப்படுத்தப்படாத ஒரு பகுதியில் நவல்னயா அவரது இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
விளாடிமிர் புடின் கொலைகாரன்
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சமூக ஊடகத்தில் பதிவிட்ட நவல்னயா, தம் மீதான நீதிமன்ற ஆணையை பொருட்படுத்த வேண்டாம் என்றும், விளாடிமிர் புடினுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று தமது ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டார்.

மேலும், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், விளாடிமிர் புடின் கொலைகாரன் மட்டுமல்ல போர் குற்றவாளி என்றும் குறிப்பிட்டுள்ள நவல்னயா, அவருக்கான இடம் சிறை தான், சொகுசு மாளிகை அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக அரசியல் செய்தமையால் அலெக்ஸி நவல்னி ரஷ்ய ஆர்க்டிக்கில் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்த நிலையில் சிறையில் வைத்து நவல்னி திடீரென்று மரணமடைந்தார். ஆனால் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவே அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |