மைதானத்தில் அதிர்ந்த அந்த சத்தம்! விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட நவீன் உல் ஹக்
மைதானத்தில் கோலி, கோலி என ரசிகர்கள் எழுப்பும் சத்தம் எனக்கு உற்சாகத்தை வழங்கியது என லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியாக விளையாடும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
நவீன் உல் ஹக் -கோலி மோதல்
நடப்பு ஐபிஎல் சீசனில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாக விராட் கோலி-நவீன் உல் ஹக் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பார்க்கப்படுகிறது.
விராட் கோலி அவருடைய ஷூ கொண்டு பந்துவீச்சு தடத்தை சேதப்படுத்துவதாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரர் நவீன் உல் ஹக் நடுவரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து இருவருக்குமான வாக்குவாதம் தொடங்கியது.
PTI/TWITTER
இது பின் விராட் கோலி, கௌதம் கம்பீர் இடையிலான மோதலாக மாறி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் அதை அனுபவிக்கிறேன்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், விராட் கோலி குறித்து நவீன் உல் ஹக் மீண்டும் பேசியுள்ளார்.
அதில், மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் கோலி,கோலி என்று கத்தும் போது அதனை நான் மிகவும் ரசித்து அனுபவித்தேன், இவை என்னுடைய அணிக்கு மேலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தி தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
Naveen Ul Haq (on 'Kohli, Kohli' chants) said, "I like that everybody in the ground is chanting his name or any player's name. I enjoy it. It gives me passion to do well for my team". pic.twitter.com/Iyqt6Ozqec
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 25, 2023
அத்துடன் இந்த ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது, நான் சில விடயங்கள் இதன் மூலம் கற்றுக் கொண்டேன், நான் ஒருபோதும் விராட் கோலியுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது, அவர் கிரிக்கெட் விளையாட்டின் பிராண்ட், என்னுடைய மிகப்பெரிய மன்னிப்பை விராட் கோலியிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.