ஹமாஸ் தலைவர் கொலை... பின்லேடனை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் கடும் எச்சரிக்கை
ஒசாமா பின்லேடனை கொல்ல களமிறக்கப்பட்ட Navy SEAL வீரர் ஒருவர் ஜோ பைடன் மற்றும் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் நபருக்கும் ஹமாஸ் தலைவர் படுகொலை தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறு வெல்ல வேண்டும்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொலை செய்ததன் ஊடாக போரை எவ்வாறு வெல்ல வேண்டும் என இஸ்ரேல் நமக்கு காட்டியுள்ளதாக Navy SEAL வீரர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லேடனை தலையில் சுட்டுக் கொன்றதாக கூறும் Rob O'Neill என்பவரே, இஸ்ரேலின் நடவடிக்கையை பாராட்டியுள்ளார். Navy SEAL என்பது அமெரிக்க கடற்படையின் முதன்மை சிறப்பு நடவடிக்கைப் படையாகும்.
போர் ஒன்றை எவ்வாறு வெல்ல வேண்டும் என இஸ்ரேல் நமக்கு காட்டுவதாக குறிப்பிட்ட அவர், முதன்மையான தலைவர்களை ஒவ்வொருவராக அவர்கள் அப்புறப்படுத்துவதாக பாராட்டியுள்ளார்.
ஆனால் சின்வார் கொல்லப்பட்டதன் பின்னர் ஜோ பைடனின் கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ள Rob O'Neill, போரை யாரோ தொடங்க அனுமதித்துவிட்டு, போர் நிறுத்தம் குறித்து பேசுவது முறையல்ல என்றார்.
முக்கியமான தருணம்
சின்வார் கொல்லப்பட்டுள்ளதால், ஹமாஸ் படைகளின் போர் குணம் குறைந்திருக்கும். இது இஸ்ரேல் ராணுவத்திற்கு மிக முக்கியமான தருணம் என்றார். Rob O'Neill மற்றும் 6 பேர்கள் கொண்ட SEAL குழுவினரே பாகிஸ்தானில் ரகசியமாக வாழ்ந்துவந்த பின்லேடனை படுகொலை செய்தார்கள்.
2014ல் முதல் முறையாக பின்லேடனை சுட்டுக்கொன்றது தாம் என Rob O'Neill வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடையவர்களை படுகொலை செய்யாமல் விசாரணைக்கு உட்படுத்தியது முறையல்ல என்ற கருத்தையும் Rob O'Neill முன்வைத்துள்ளார்.
இஸ்ரேல் போன்று துணிச்சலான முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் மற்றும் நாட்டின் புதிய ஜனாதிபதிக்கும் அவர் இந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |