50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை! யார் அந்த சாதனை நாயகி?
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, விளம்பரங்களிலும் கலக்கி வருகிறார்.
சமீபத்தில், டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அவர் பெற்றுக் கொண்ட சம்பளம் அவரை இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உயர்த்தியுள்ளது.
சாதனைகளின் நாயகி
ஆரம்பத்தில், நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இல்லாத நயன்தாரா, இறுதியில் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
நயன்தாராவின் திரைப்பயணத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அவரது ரீ-என்ட்ரி வலுவானதாகவும், தனது திறமையை இந்திய சினிமா உலகத்துக்கு நிருபிப்பதாகவும் இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளில் 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நயன்தாரா, பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ‘பிரபலங்கள் 100’ பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய முன்னணி பெண் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
The 'Most Versatile Actress of the Year' award at Dadasaheb Phalke International Film Festival 🏆 pic.twitter.com/YsNChjdCFh
— Nayanthara✨ (@NayantharaU) January 11, 2025
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை
ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய நயன்தாரா தற்போது இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
சமீபத்தில், டாடா ஸ்கை நிறுவனத்தின் 50 வினாடி விளம்பரத்தில் நடிப்பதற்கு நயன்தாரா கிட்டத்தட்ட ரூ.5 கோடி சம்பளமாக பெற்று இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தன்னை உயர்த்தி கொண்டுள்ளார்.
அத்துடன் நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரின் திருமணத்தை ‘Nayanthara: Beyond the Fairytale’ என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |