நயன்தாராவின் சரும அழகின் ரகசியத்திற்கு இந்த ஒரே ஒரு பொருள் தான் காரணமாம்: என்ன தெரியுமா?
லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தென்னிந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
இத்தனை ஆண்டுகள் கடந்தும் தனது அழகை சிறப்பாக பராமரித்து வருகிறார். இதற்கு காரணம் வீட்டில் உள்ள ஒரு சாதாரண பொருள் தான். அது தான் தேங்காய் எண்ணெய்.
நயன்தாரா தினமும் தேங்காய் எண்ணெயால் சரும பராமரிப்பை மேற்கொள்வார்.
ஏனெனில் தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைப்பதோடு, சருமத்தை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளுமாம்.
நீங்களும் நயன்தாராவைப் போன்று அழகான சருமத்தைப் பெற விரும்பினால், தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பயன்படுத்துங்கள்.
கீழே தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சில பேஸ்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி உங்கள் சரும அழகை மேம்படுத்துங்கள்.
1. தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்
ஒரு கிண்ணத்தில் 1/4 கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/4 கப் ஷியா வெண்ணெய் சேர்த்து, அடுப்பில் வைத்து உருக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதை இறக்கி, தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி குறைந்தது 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
2. தேங்காய் எண்ணெய் மற்றும் தேயிலை எண்ணெய்
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2-3 துளிகள் தேயிலை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அந்த எண்ணெயை தினமும் இரவு தூங்கும் முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் கழுவி கொள்ளலாம்.
3.தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள்
ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்பேக்கை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு 2 முறை இந்த பேஸ்பேக்கை முகத்தில் தடவி, 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5.தேங்காய் எண்ணெய் மற்றும் காபித் தூள்
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி, மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பிரகாகமாக ஜொலிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |