டீ, பிஸ்கட் மட்டும் தான்.. சமோசா தரலைங்க: இந்தியா கூட்டணி சந்திப்பில் வருத்தமடைந்த எம்.பி
இந்தியா கூட்டணி சந்திப்பின் போது டீ, பிஸ்கட் மட்டும் தான் கொடுத்தார்கள், சமோசா தரவில்லை என்று எம்.பி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 25 கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணிக்கு இந்தியா (INDIA) என்று பெயரிட்டனர்.
இந்தியா கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், மூன்றாவது சந்திப்பு மும்பையிலும் நடந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா கூட்டணியின் நான்காம் சந்திப்பு இந்திய தலைநகரான டெல்லியில் நடைபெற்றது.
அப்போது, கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், கூட்டணி சந்திப்பின் போது பிரதமர் வேட்பாளர் பற்றிய முடிவு எட்டப்படவில்லை.
பீகார் எம்.பி கூறியது
இந்நிலையில் இந்த சந்திப்பில் பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு பங்கேற்றார். அவர், இந்த கூட்டம் குறித்து பேசுகையில், "இந்த சந்திப்பின் போது பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நெருக்கடியில் இருந்ததால் மக்களிடம் நன்கொடை கேட்கப்பட்டது.
கடந்த சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா ஆகியவை வழங்கி உபசரிக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பில் டீ, பிஸ்கட் மட்டும் தான், சமோசா இல்லை. இட ஒதுக்கீடு, பிரதமர் வேட்பாளர் குறித்த விடயங்கள் குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |