374 ஓட்டங்கள் இலக்கினை டை செய்த அணி! சூப்பர் ஓவரில் 30 ஓட்டங்கள்..மே.தீவுகளை வீழ்த்தி அபாரம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன் மிரட்டல் சதம்
உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்கள் குவித்தது.
நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 65 பந்துகளில் 104 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணியும் 50 ஓவர்களில் 374 ஓட்டங்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது.
AP
சூப்பர் ஓவரில் கதிகலங்க வைத்த வீரர்
இதன் காரணமாக சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய நெதர்லாந்து ஒரு ஓவரில் 30 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் வான் பீக் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசினார்.
பின்னர் ஆடிய மே.தீவுகள் 5 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. ஒரே ஓவரில் 30 ஓட்டங்கள் எடுத்ததுடன், சூப்பர் ஓவரை வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய லோகன் வான் பீக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
KNCB cricket (Twitter)
ICC (Twitter)
KNCB cricket (Twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |