பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது.
இன்று நடந்த ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய அணியின் சார்பில் கிஷோர் ஜெனா, நீரஜ் சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குரூப் ஏ பிரிவில் பங்குபெற்ற கிஷோர் ஜெனா 80.73 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்தார். அதனைத் தொடர்ந்து குரூப் பி பிரிவில் பங்குபெற்ற நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்தார்.
இருவரில் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். 26 வயதாகும் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார்.
அதேபோல் இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |