காமன்வெல்த் போட்டியில் இருந்து வெளியேறும் நீரஜ் சோப்ரா: கவலையில் இந்திய ரசிகர்கள்
பிரித்தானியாவின் பர்மிங்காமில் வைத்து நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அதன்பின் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகனாக கருதப்பட்டு வருகிறார்.
இதுவரை ஒலிம்பிக்கின் தடகள போட்டியில் தங்க பதக்கங்கள் வெல்லாத இந்திய அணிக்கு நீரஜ் சோப்ராவின் வெற்றி, மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
Our Olympic Champ @Neeraj_chopra1 will not be defending his title at @birminghamcg22 due to concerns regarding his fitness. We wish him a speedy recovery & are supporting him in these challenging times.#EkIndiaTeamIndia #WeareTeamIndia pic.twitter.com/pPg7SYlrSm
— Team India (@WeAreTeamIndia) July 26, 2022
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா, சுமார் 89.94 மீட்டர் ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது முடிவில் அவரது வலது மேல் கால் பகுதியில் சில அசௌகரியங்களை உணர்ந்துள்ளார், இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீரஜ் சோப்ராவிற்கு காயம் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
This was Neeraj speaking about strapping on his thigh after his fourth throw during the world's.
— Lavanya ?️???? (@lav_narayanan) July 26, 2022
We are yet to know what the nature of the injury is to him. Wishing him a speedy recovery.
?: SAI/AFI #NeerajChopra #CWG2022 #TeamIndia pic.twitter.com/UiiFkKJiO7
கூடுதல் செய்திகளுக்கு: மக்களை கொல்லவே வந்தேன்...மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஜப்பான் குற்றவாளி!
இந்தநிலையில் பிரித்தானியாவின் பர்மிங்காமில் வைத்து நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக கலந்து கொள்ளமாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.