நெல்லை பேருந்து நிலையம் அருகே வெள்ள நீரில் மிதந்து வந்த சடலம்.. அதிர்ச்சி சம்பவம்
நெல்லையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ள நீர்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்தது.
இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நீர் தேங்கியதோடு, ஆறுகள், நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகளில், சாலைகளிகள் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களில் ஆளுயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியுள்ளதால், கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அத்யாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால், மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்புப்படையினர் வந்து தங்களை மீட்க வேண்டி அவர்கள் காத்திருக்கின்றனர்.
மிதந்து வந்த சடலம்
இந்நிலையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே தேங்கியிருந்த வெள்ள நீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PTI
இப்பகுதியில் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் சடலத்தை மீட்க சிக்கல் நிலவிவருகிறது. மீட்பு படையினர் வந்து சடலத்தை மீட்டால் மட்டுமே அவர் யார் என்று தெரிய வரும்.
நெல்லையில் வெள்ள நீரில் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |