பேரன் திருமணத்தில் 96 வயது முதியவர் செய்த காரியம்: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
நேபாளத்தில் முதியவர் ஒருவர் அவரது பேரன் திருமணத்தில் நடனமாடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முதியவர் நடனம்
நேபாளத்தில் 96 வயது முதியவர் ஒருவர், பேரனின் திருமண விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் முன்னிலையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நேபாள இசைக்கு ஏற்றவாறு அந்த 96வது முதியவர், அழகான நடன உடல் அசைவுகளை ஏற்படுத்தியது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
இணையத்தில் கலக்கும் வீடியோ
திருமண விழாவில் 96 வயது முதியவர் நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
மேலும் அதில், “காதலையும், அன்பையும் கொண்டாடும் போது வயது என்பது வெறும் நம்பர் தான்! அந்த வகையில் 96 வயதான முதியவர் அவரது பேரனின் திருமணத்தில் நடமாடுவதை பாருங்கள்,” என்று தலைப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வீடியோ தற்போது 76 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து இருப்பதுடன், அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.