நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு: அதிர்ச்சிகரமான தருணங்களின் கேமரா காட்சிகள்
Nepal Flood Terrifying Moments Viral Videos: நேபாள - திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் கேமராவில் பதிவான அதிர்ச்சிகரமான தருணங்கள் வெளியாகியுள்ளன.
நேபாள - திபெத் எல்லையில் திடீர் வெள்ளப்பெருக்கு
நேபாள - திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.
போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 157 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டினரை சேர்த்து மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
வீடியோவில் பதிவான அதிர்ச்சிகரமான தருணங்கள்
திபெத்தின் ஜிரோங்(Gyirong) துறைமுகத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில், புதன்கிழமை காலை 9 மணியளவில் தடிமான சேறு, பாறைகள், குப்பைகள், ஆகியவற்றை அடித்துக் கொண்டு பிரமாண்ட வெள்ளமானது கரைகளை துடைத்தெறிந்து செல்லும் தருணங்கள் பதிவாகியுள்ளது.
This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even imagine someone surviving this. Prayers for everyone affected. 🙏 https://t.co/o805P8KGSu pic.twitter.com/31QzZ64aBD
— Nikhil saini (@iNikhilsaini) August 26, 2026
அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
அந்த பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான மக்கள் தப்பியோட முயன்றதும், ஆனால் சில நொடி பொழுதில் அவர்களையும் வெள்ளம் சூறையாடி இழுத்துச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.
இதைப்போன்று இன்னும் பல பகுதிகள் இந்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |