உயிரோடு எரிக்கப்பட்ட முன்னாள் பிரதமரின் மனைவி - நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்
நேபாள போராட்டத்தில்,முன்னாள் பிரதமரின் மனைவி உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார்.
நேபாள போராட்டத்தில் வன்முறை
நேபாளத்தில் 26 சமூகவலைத்தளங்களை அரசு தடை செய்தது. இந்த தடை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என கருதிய இளம் தலைமுறையினர், போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டக்குழுவினருக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில், 19 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, போராட்டத்திற்கு பணிந்த நேபாள அரசு, சமூகவலைத்தளங்கள் மீதான தடையை நீக்கியதோடு, போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தது.
போராட்டத்தை கைவிட மறுத்த போராட்ட குழுவினர், பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரிப்பு
போராட்டக்காரர்கள், நாடாளுமன்ற கட்டிடம், அமைச்சர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
ஏற்கனவே 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடேல் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர்.
நிதி அமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேல், காட்மாண்டு சாலைகளில் போராட்டக்குழுவினர், விரட்டி விரட்டி தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nepal’s Finance Minister Bishnu Prasad Paudel runs as a mob chasea him.
— Rahul Shivshankar (@RShivshankar) September 9, 2025
The attack occurred as thousands of Gen Z protesters clashed with security forces across the capital, Kathmandu, and other cities. pic.twitter.com/SbMts9LTaK
முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீட்டிற்குள் புகுந்த போராட்டகாரர்கள் அவரை ரத்தம் வருமளவிற்கு தாக்கினர். அவரது மனைவி வெளியுறவு அமைச்சர் அர்சு ராணா தியூபாவும் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார்.
நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், அவரது மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |