நேபாள விமான விபத்து: விமானி மட்டும் உயிர் பிழைத்தது எப்படி?
நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில் விமானி மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நேபாள விமான விபத்து
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானது.
19 பணியாளர்களுடன் போகர் நோக்கிச் சென்ற சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி, நொடியில் தீ பிடித்து எரிந்தது.
Moment of Crash-
— Anchor Manish Kumar (@manishA20058305) July 24, 2024
- 18 People including crews are dead. -According to local news
- Pilot admitted in KMC Sinamangal Hospital in Kathmandu. #Kathmandu #Nepal #sauryaairlines #tribhuvanairport #planecrash #Breaking pic.twitter.com/YUDNHbWsm1
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 37 வயதான விமானத்தின் பைலட் மனிஷ் ஷக்யா மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விமானி மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடுப்பாலத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட மும்பை பொறியாளர்! அதிர்ச்சி வீடியோ
விமானி எப்படி உயிர் பிழைத்தார்?
மீட்பு குழுவினர் தெரிவித்த தகவலின் படி, விபத்து நடந்த போது விமானத்தின் காக்பிட் பகுதி ஒரு கன்டெய்னர் மீது மோதி, விமானத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக பிரித்துள்ளது.
இந்த சம்பவம் விமானியை தீயிலிருந்து காப்பாற்றியுள்ளது.
மேலும் தீப்பிழம்புகள் காக்பிட்டை நெருங்கியபோது, மீட்புக்குழுவினர் சரியான நேரத்தில் விமானியை காப்பாற்றினர்.
கேப்டன் மனிஷ் ஷக்யா உடல்நலம் தேறி வருவதாகவும், குடும்ப உறுப்பினர்களிடம் நலமாக இருப்பதாக தெரிவித்ததாகவும் பிபிசி நேபாள சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |