நேபாளத்தில் பயங்கர விமான விபத்து: வெளியான வீடியோ ஆதாரங்கள்
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் (Kathmandu) பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று புறப்படும் போது விபத்துக்குள்ளானது.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
19 பணியாளர்களுடன் போகர் நோக்கிச் சென்ற இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி, நொடிகளில் பாரிய அளவில் தீபிடித்து விமானம் எரிந்தது.
தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தின் பைலட் 37 வயதான மனிஷ் ஷக்யா மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும், அவர் கடுமையான காயங்களுடன் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள்:
Moment of Crash-
— Anchor Manish Kumar (@manishA20058305) July 24, 2024
- 18 People including crews are dead. -According to local news
- Pilot admitted in KMC Sinamangal Hospital in Kathmandu. #Kathmandu #Nepal #sauryaairlines #tribhuvanairport #planecrash #Breaking pic.twitter.com/YUDNHbWsm1
#Saurya Airlines Mitsubishi CRJ-200 (9N-AME) lost control and crashed immediately after takeoff from runway 02 at #Kathmandu Int'l Airport, #Nepal, on a flight to Pokhara. At least 13 of the 19 occupants on board did not survive. Rescue is ongoing.
— FlightMode (@FlightModeblog) July 24, 2024
🎥 Unknown Copyrights pic.twitter.com/e5QVtWOFCa
#BREAKING
— Mohammed Faizan Shaikh (@king7851007) July 24, 2024
A Saurya Airlines aircraft crashes during takeoff at Tribhuvan International Airport in #Kathmandu, Nepal.
The Pokhara-bound plane, carrying 19 people including the crew, met with the accident around 11 am.#NepalPlaneCrash #Nepal #planecrash pic.twitter.com/2ek90fvlEU
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |