இந்த கொரோனாக்கள் இல்லை! WHO முக்கிய அறிவிப்பு
நேபாளம் மற்றும் வியட்நாம் நாடுகளில் தோன்றியதாக கூறப்படுவது புதிய கொரோனா மாறுபாடுகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
நேபாள மாறுபாடு ஐரோப்பிய கண்டத்தில் பரவுகிறது என்ற அச்சத்தின் மத்தியில் வெளிநாடு சுற்றுலா பாதிக்கப்படலாம் என்று பிரித்தானியா அரசு கவலை கொண்டுள்ளது என்று Daily Mail செய்தித்தாள் கூறுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் நேபாள மாறுபாடு என்ற ஒன்று இல்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து WHO நேபாளம் ட்விட்டரில் பக்கத்தில், நேபாளத்தில் கண்டறியப்பட்ட SARS-CoV-2-யின் புதிய மாறுபாடு குறித்து தங்களுக்குத் தெரியாது.
புழக்கத்தில் உள்ள 3 உறுதிப்படுத்தப்பட்ட மாறுபாடுகள், ஆல்பா (பி .1.1.7), டெல்டா (பி .1.617.2) மற்றும் கப்பா (பி .1.617.1).
தற்போது நேபாளத்தில் புழக்கத்தில் இருக்கும் பிரதான மாறுபாடு டெல்டா (பி .1.617.2). என தெரிவித்துள்ளது.
அதே போல் வியட்நாமில் இந்தியா-பிரித்தானியா மாறுாபடு கூட்டாக ஒருங்கிணைந்த புதிய கலப்பு மாறுபாடு கண்டறியப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ள புதிய மாறுபாடு, கலப்பு மாறுபாடு இல்லை என வியட்நாமில் உள்ள WHO பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
WHO is not aware of any new variant of SARS-CoV-2 being detected in Nepal. The 3⃣confirmed variants in circulation are: Alpha (B.1.1.7), Delta (B.1.617.2) and Kappa (B.1.617.1). The predominant variant currently in circulation in Nepal is Delta (B.1.617.2).@mohpnep @PandavRajesh
— WHO Nepal (@WHONepal) June 3, 2021
அது டெல்டா என அழைக்கப்படும் தற்போதுள்ள இந்திய மாறுபாட்டின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்டுள்ளார்