பி.வி.சிந்து மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் சொத்து மதிப்பு மற்றும் அவரது கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பி.வி.சிந்து சொத்து மதிப்பு
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் தொழிலதிபர் வெங்கட தத்தா ஆகிய இருவருக்கும் கடந்த 22-ம் திகதி திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவரது கணவரும் தொழிலதிபர் பின்னணியை கொண்டுள்ளவர். இதனால் இவர்களது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் பெண் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக உள்ள பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் சொத்து மதிப்பு 7.1 மில்லியன் டொலர் என தகவல் வந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.59 கோடி ஆகும்.
இவருக்கு, ஹைதராபாத்தில் ஆடம்பர வீடு உள்ளது. மேலும், ஒரு பிரதான ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.
இவரிடம், நாகார்ஜுனா அக்கினேனியால் பரிசளிக்கப்பட்ட BMW X5 கார் மற்றும் ஆனந்த் மஹிந்திராவின் மூலம் கிடைத்த ஒரு மஹிந்திரா தார் கார் உள்ளது.
இவர் கடந்த 2019ம் ஆண்டில் சீன பிராண்டான லி நிங்குடன் ரூ.50 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதேபோல, மேபெல்லைன், பாங்க் ஆஃப் பரோடா, ஆசிய பெயிண்ட்ஸ் ஆகிய பிராண்டுகளுக்கு தூதராகவும் உள்ளார்.
கணவரின் சொத்து மதிப்பு
சிந்துவின் கணவர் வெங்கட் தத்தா சாய், பாசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் செயல் இயக்குநராகப் பணியாற்றுகிறார். வங்கித் துறையில் அவர் செய்த பணியின் மூலம் ரூ.150 கோடி நிகர மதிப்பைப் பெற்றுள்ளார்.
இவர் தொழிலதிபராக இருந்தாலும் விளையாட்டுத்துறை மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் செயல்பாட்டுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |