டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது: பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேலின் அமைதி விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
டிரம்புக்கு அமைதி விருது
இஸ்ரேல் நாட்டின் உயரிய குடிமகன் விருதான அமைதி விருது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு வழங்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது இரு நாட்டு தலைவர்கள் புளோரிடாவில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வெளியாகியுள்ளது.
So well deserved! President Trump is honored with ‘The Israel Prize’ for his “tremendous contributions to Israel and the Jewish people”…@netanyahu @POTUS pic.twitter.com/dlEbM6UwlC
— NanLee Marie Carissimi (@NanLee1124) December 30, 2025
பெஞ்சமின் நெதன்யாகு தகவல்
இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு வழங்கிய தகவலில், இஸ்ரேலின் உயரிய விருதான அமைதி விருதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் யூத மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் வகையில் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்த விருது இஸ்ரேலியர் அல்லாத நபர் ஒருவருக்கு வழங்கப்படுவதாகவும், மேலும் அமைதிக்கான பிரிவில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |