ஈரானிய மக்களை வீதிகளில் இறங்கி போராட அழைப்பு விடுத்த இஸ்ரேல்
ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி தங்கள் அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறலைக் கோருமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்தார்.
உதவ காத்திருப்பதாக
இஸ்ரேலுடனான 12 நாட்கள் கடும் மோதலுக்குப் பின்னர் ஈரான் மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அதிரடி தாக்குதலில் ஈரானின் மூத்த இராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் என பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை சேதப்படுத்தி இழப்புகளை ஏற்படுதியது. அரசாங்கம் தரப்பில் வெறும் 30 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால் சர்வதேச பத்திரிகைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் உண்மை நிலவரம் வெளிவரவில்லை. இந்த நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள நெதன்யாகு, ஈரானின் தண்ணீர் பிரச்சனை தொடர்பில் பேசியுள்ளார்.
இந்தக் கொடூரமான கோடை வெப்பத்தில், உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க சுத்தமான, குளிர்ந்த நீர் கூட உங்களிடம் இல்லை. எப்போது உங்கள் நாடு விடுவிக்கப்படுகிறதோ, அப்போதே இஸ்ரேலின் குடிநீர் நிபுணர்கள் ஈரான் மக்களுக்கு உதவ காத்திருப்பதாகவும்,
போராட வேண்டும்
நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு நகரத்திற்கும் சுத்தமான குடிநீருக்கான ஏற்பாடு செய்யப்படும் என்றார். மேலும், ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும், வீதிகளில் இறங்கி போராடவும்,
உங்கள் குடும்பங்களின் நல்ல எதிர்காலத்திற்காகவும் மொத்த ஈரானிய மக்களுக்காகவும் போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நெதன்யாகு,
காஸா மீதான 22 மாத போரினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தத்தையும் எதிர்கொண்டு வருகிறார். மேலும் மில்லியன் கணக்கான காஸா மக்களை பட்டினியால் கொல்ல நெதன்யாகு திட்டமிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |