இந்தியா மீதான வரி விதிப்பால் பலத்த அடி வாங்கிய அந்த நாடு... ட்ரம்ப் வெளிப்படை
ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிய அடியை ஏற்படுத்தியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்யா தயாராக வேண்டும்
உலகளாவிய அழுத்தங்கள் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க வரிகள் விதிப்பதால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டை கட்டியெழுப்ப ரஷ்யா தயாராக வேண்டும் என்றும், அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரிகளை விதித்துள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்கியதால் கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்துள்ளது. இதனால் தற்போது அமெரிக்காவிற்கு 50 சதவீத வரி செலுத்தும் நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
உலக நாடுகள் மீது வரி விதிப்பதால் அமெரிக்கா வருவாய் ஈட்டியுள்ளது மட்டுமின்றி, வரி விதிப்பு காரணமாக இந்தியா - பாகிஸ்தான் உட்பட 5 இராணுவ மோதல்களை தாம் தீர்த்து வைத்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
நம்ப முடியாமல் உள்ளனர்
37 ஆண்டுகளாக நீடித்து வந்த அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா மோதலை தாம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும், அந்த நாடுகளின் தலைவர்களே இதை நம்ப முடியாமல் உள்ளனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பல முறை முயன்றும், அந்த நாடுகளின் தலைவர்கள் பல முறை முயன்றும் முடியாமல் போனதை, தமது தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் முடித்து வைத்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா போரின் பாதையில் இருந்து விலகினால், அமெரிக்காவுடன் வர்த்தகம் முன்னெடுக்கும் சூழல் உருவாகலாம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |