கொத்தாக பலர் கொல்லப்பட்ட பேஜர் தாக்குதல்... நெதன்யாகு சொன்ன ரகசியம்
லெபனானில் பேஜர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட விவகாரத்தில், தாம் ஒப்புதல் அளித்திருந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
குறித்த தாக்குதலில் 40 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 3,000 பேர்கள் காயங்களுடன் தப்பினர். இவர்கள் அனைவரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படையினர். பேஜர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தாலும், இதுவரை வெளிப்படையாக எவரும் உறுதி செய்யவில்லை.
ஆனால் தற்போது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். ஞாயிறன்று பேசிய அவர், லெபனானில் ஹிஸ்புல்லா படைகள் மீதான பேஜர் தாக்குதலுக்கு தாம் ஒப்புதல் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18ம் திகதிகளில் ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்திய பேஜர்கள் திடீரென்று வெடிக்கத் தொடங்கின. இதனையடுத்து, இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானும் ஹிஸ்புல்லாவும் குற்றஞ்சாட்டின.
காயமடைந்த ஹிஸ்புல்லா உறுப்பினர்களில் சிலர் கைவிரல்களை இழந்ததாகவும், சிலர் கண்பார்வையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களை அதன் தகவல் தொடர்பு அமைப்பின் மீதான இஸ்ரேலின் அத்துமீறல் என்று கூறியதுடன், தாக்குதலுக்கு பழிவாங்குவதாகவும் ஹிஸ்புல்லா படைகள் உறுதியளித்தனர்.
இஸ்ரேலிய இராணுவ தொழில்நுட்பத்தால் கண்காணிக்கப்படுவதில் இருந்து தப்பவே, ஹிஸ்புல்லா படைகள் பேஜர்களை பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை குறிப்பிட்டு,
ஒரு பயங்கரமான போர்
போரின் இலக்குகளை தாங்கள் விரிவுபடுத்த இருப்பதாக இஸ்ரேல் கூறிய சில மணி நேரங்களில் பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வாரம் இந்த கொடூர தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அமைப்பிடம் லெபனான் அரசாங்கம் புகார் அளித்துள்ளது.
மட்டுமின்றி, இது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான போர் என்றும் குறிப்பிட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் வெடித்ததில் இருந்து லெபனான் எல்லையில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையிட்டு வருகின்றன.
அப்போதிருந்து, ஈரான் ஆதரவு குழுவின் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டனர். கடந்த மாதம், ஹிஸ்புல்லாவின் ஹஷேம் சஃபிதீனை அழித்துவிட்டதாக இஸ்ரேலின் இராணுவம் உறுதிப்படுத்தியது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |