நெதன்யாகுவிற்கு சிறை தண்டனை கிடைக்கலாம்... உருவாகும் புதிய சிக்கல்
காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், புதிதாக தேர்தல் முன்னெடுக்கப்பட்டு நெதன்யாகுவின் ஊழல் வழக்குகள் விசாரிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வலுக்கட்டாயமாக சாதிக்கப்படும்
இதனால் அவர் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் போகலாம் அல்லது சிறைக்கு அனுப்பப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மக்களுக்கான தொலைக்காட்சி உரையில்,
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் தனது நோக்கத்தை அடைய கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால் போருக்குத் திரும்பும் அச்சுறுத்தலை அவர் மீண்டும் முன்வைத்தார். ஹமாஸ் படைகள் நிராயுதபானியாக்கப்படும், காஸாவில் அவர்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்படும் என்றார்.
இது எளிதாக முடிவிற்கு வந்தால், அது நல்லது என குறிப்பிட்ட நெதன்யாகு, இல்லை என்றால் வலுக்கட்டாயமாக சாதிக்கப்படும் என்றார். வெள்ளிக்கிழமை முதல் காஸாவில் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது. இதனையடுத்து, 72 மணி நேரத்தில் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க உள்ளது.
பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் வாடும் 2,000 பாலஸ்தீன மக்கள் விடுதலை பெற உள்ளனர். ஆனால் இதன் அடுத்த கட்டம் என்ன என்பது உறுதி செய்யப்படவில்லை.
இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய 24 மாத தொடர் மோதலை முன்னெடுத்து தாம் சாதித்ததாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஆனால், நெதன்யாகுவின் வெள்ளிக்கிழமை உரையை வெறும் தேர்தலுக்கான பரப்புரை என்றே விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் பரப்புரையில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு உத்தரவிட்டேன், இதற்கு உத்தரவிட்டே, நானே அனைத்தையும் செய்து முடித்தேன் என தனக்கு எது தெரியுமோ அதை அவர் திறன்பட செய்து வருகிறார் என குறிப்பிடுகின்றனர்.
தோல்வியை சந்திக்கும்
ஹமாஸ் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர், நெதன்யாகுவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க வகையில் உயரவில்லை. ஆனால் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள நெதன்யாகு, தேர்தலை எதிர்கொள்ளாமல் இருக்க, கிடைத்த வாய்ப்பாக காஸா மீது போர் பிரகடனம் செய்தார். தற்போது இஸ்ரேலில் தேர்தல்கள் சுமார் ஒரு வருடத்திற்குள் நடைபெற உள்ளன, பெரும்பாலான விமர்சகர்கள் ஆறு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பில், இரண்டு வருடங்கள் நீடித்த போருக்கு பின்னரும் நெதன்யாகுவின் Likud கட்சி தற்போதிருக்கும் நிலையில் இருந்து வெறும் இரண்டு ஆசனங்கள் மட்டுமே அதிகமாக பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தற்போதைய நெதன்யாகுவின் கூட்டணி இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இஸ்ரேல் மக்கள் தேர்தலுக்காக காத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மொத்தமாக 18 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நெதன்யாகு, அடுத்த சில வாரங்களில் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள இருக்கிறார் என்றே கூறப்படுகிறது. அவர் மீதான ஊழல் வழக்குகள் இனி ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் செய்யலாம் அல்லது அவரை சிறைக்கு அனுப்பலாம் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |