இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல்
வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம்
தாக்குதல் நடந்த வேளை, பிரதமர் நெதன்யாகு வீட்டில் இல்லை என்றே செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக, லெபனானில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
மேலும், கட்டிடம் ஒன்றில் ட்ரோன் மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த மேலும் இரண்டு ட்ரோன் விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சிசேரியா நகரில் அமைந்துள்ள அந்த குடியிருப்பானது நெதன்யாகு ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்துள்ளார்.
படுகொலை திட்டமாக இருக்கலாம்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ள நிலையில், பழிவாங்கும் நோக்கில் நெதன்யாகுவின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றே இஸ்ரேல் ராணுவ தளபதிகள் நம்புகின்றனர்.
மேலும், ஈரான் முன்னெடுத்த படுகொலை திட்டமாக இருக்கலாம் என்றும் இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோன் தாக்குதல் குறித்து அவசர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ட்ரோன் தாக்குதல் தொடர்பில் இதுவரை ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |