இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றம் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு
Netanyahu invites Indian Pilot to Israel Independence: இஸ்ரேலிய நாட்டின் சுதந்திர தின விழாவில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் கலந்து கொள்ள உள்ளார்.
இந்திய விமானியிடம் பேசிய இஸ்ரேலிய பிரதமர்
கடந்த புதன்கிழமை காலை துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃப்ளைதுபாய்(Flydubai) விமானம் FZ1073 சவுதி அரேபியாவின் தபூக்(Tabuk) விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இஸ்ரேலிய நாட்டினர் உட்பட 174 பேருடன் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது, விமானத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய ஓமன் நாட்டு இணை விமானியின் முயற்சியை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அபாரமான துணிச்சல் முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்த சம்பவத்தின் போது பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானி கேப்டன் மிஸ்ராவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றினார்.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் முதல் இந்தியர்
இந்த தொலைபேசி அழைப்பின் போது, விமானத்தில் நடந்த விஷயங்களை கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் இஸ்ரேலிய பிரதமர் கேட்டறிந்தார்.
இதையடுத்து தங்களின் மன உறுதி தான் அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றியதாகவும், நீங்கள் ஒரு ஹீரோ என்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் தீப்பந்தம் ஏற்றுவதற்கு இஸ்ரேலிக்கு வருகை தருமாறும் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் மோடி தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும், அவருடன் இணைந்து நீங்களும் உங்கள் மனைவியும் இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலிய சுதந்திர தின விழாவில் தீப்பந்தம் ஏற்றுவதற்கு இஸ்ரேலியர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், வரலாற்றில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்ற உள்ளார் என்பதையும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.