நெதன்யாகு தொடர்பான வதந்தி: காபி கடைக்கு சென்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: வைரல் வீடியோ
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னுடைய இருப்பு தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நெதன்யாகு தொடர்பான வதந்தி
ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் நடவடிக்கை இரண்டு வாரத்தை தாண்டி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு-விற்கு 6 விரல்கள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது.
மேலும் அந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என கூறி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு உயிருடன் இல்லை என்பது போன்ற வதந்திகளும் பரவின.
אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 15, 2026
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேலில் உள்ள காபி கடை ஒன்றுக்கு நேரில் சென்று அனைவரையும் நெதன்யாகு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், காபி கடையில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடன் நெதன்யாகு இயல்பாக உரையாடுவதை பார்க்க முடிகிறது.
மேலும், என் மக்களுக்காக உயிரை இழக்கவும் தயாராக இருக்கிறேன். என்னுடைய விரல்களை எண்ணிப் பார்க்க விரும்புகிறீர்களா? இங்கே பாருங்கள் எல்லாம் சரியாக உள்ளது என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |