ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக்காக முறையிட்ட பெஞ்சமின் நெதன்யாகு

Benjamin Netanyahu Israel
By Arbin Nov 30, 2025 06:13 PM GMT
Report

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிடம் பொது மன்னிப்பு கோரும் கோரிக்கையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொறுப்புடனும் உண்மையுடனும்

குறித்த தகவலை இஸ்ரேலின் ஜனாதிபதி மாளிகையும் உறுதி செய்துள்ளது. மேலும், இது ஒரு அசாதாரண கோரிக்கை என்பதையும், இது குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி அலுவலகம் அறிந்திருக்கிறது.

ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக்காக முறையிட்ட பெஞ்சமின் நெதன்யாகு | Netanyahu Officially Asks Pardon

இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து கருத்துகளையும் பெற்ற பிறகு, ஜனாதிபதி பொறுப்புடனும் உண்மையுடனும் கோரிக்கையை பரிசீலிப்பார் எனவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

நெதன்யாகு மட்டுமின்றி, அவரது மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள்

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள்

இந்த விசாரணை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், பிரதமர் நெதன்யாகு காஸா மீது போர் பிரகடனம் செய்தார். போர் காலம் என்பதால், ஊழல் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது ட்ரம்பின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், காஸா மீதான தாக்குதலை நெதன்யாகு நிறுத்தவில்லை. அத்துடன், லெபனான் மீதும் சிரியா மீதும் புதிதாக தாக்குதலை தொடங்கும் முனைப்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக்காக முறையிட்ட பெஞ்சமின் நெதன்யாகு | Netanyahu Officially Asks Pardon

போர் குற்ற விசாரணை

காஸா போர் நிறுத்தம் எந்த இடையூறும் இன்றி நீடிக்கும் என்றால், தேர்தலை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே பணயக்கைதிகளை மீட்க நெதன்யாகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போரை முன்னெடுப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு இஸ்ரேல் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் தூண்டியிருந்தது.

ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக்காக முறையிட்ட பெஞ்சமின் நெதன்யாகு | Netanyahu Officially Asks Pardon

இதனாலையே, இஸ்ரேல் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையும் ஏற்பட்டது. ஆனால், தனது அரசியல் ஆதாயத்திற்காக காஸா மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்ததுடன், பெண்கள், சிறார்கள் உட்பட பாலஸ்தீன மக்கள் 70,000 பேர்கள் இறப்புக்கு அவரது முடிவு காரணமானது.

மட்டுமின்றி, அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன், கைதாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வருவதுடன், தாம் குற்றமற்றவர் என்றே சாதித்து வருகிறார்.

ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக்காக முறையிட்ட பெஞ்சமின் நெதன்யாகு | Netanyahu Officially Asks Pardon

இஸ்ரேலில் அவரது அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதாலையே, தற்போது ஜனாதிபதியின் மன்னிப்பை அவர் கோரியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US