நெதன்யாகுவுக்கு பொது மன்னிப்பு? அடுத்தகட்ட நடவடிக்கை: முழுமையான பின்னணி
ஜனாதிபதி இசாக் ஹெர்சாக்கிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தியோகப்பூர்வமாக பொது மன்னிப்புக்கு முறையிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரம்
இஸ்ரேலில் மூன்று குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நெதன்யாகு, தன் மீதான விசாரணை நாட்டில் பிளவுகளை ஆழப்படுத்துவதாகவும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு காரணமாகும் என்றும் வாதிட்டுள்ளார்.

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கையானது நிபுணர்களின் மதிப்பாய்வுக்காக நீதித்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். பின்னர் அது ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள சட்ட ஆலோசகருக்குச் செல்லும், அவர் கூடுதல் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பார்.
ஆனால், பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் விரிவானதாகவும், அதில் லேசான கட்டுப்பாடுகள் மட்டுமே கொண்டதாகவும் சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், நெதன்யாகுவிற்கு பலனேதும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர். இதனிடையே, சட்டத்திற்கு உட்பட்டு, அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்த பின்னரே ஜனாதிபதி மன்னிப்பு கோரிக்கையை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மட்டுமின்றி, தண்டனை அறிவிப்புக்கு முந்தைய மன்னிப்புக்கான சாத்தியம் என்பது மிகவும் அரிதானதாகவே கூறப்படுகிறது. சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, தண்டனை வழங்குவதற்கு முன் மன்னிப்பு வழங்குவது, சட்டத்தின் ஆட்சியை அச்சுறுத்துவதாகும்.

இது சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கொள்கையை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். நெதன்யாகுவின் கோரிக்கையை விமர்சித்த பலர், இது ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்தக்கூடும் என்றும், இஸ்ரேலில் சிலர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆபத்தான செய்தியை அனுப்பக்கூடும் என்றும் எச்சரித்தனர்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல், வருத்தம் தெரிவிக்காமல், உடனடியாக அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறாமல் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட் வாதிட்டுள்ளார்.

இஸ்ரேல் வரலாற்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் பிரதமரான நெதன்யாகு மீது மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சாட்சியத்தை தாமதப்படுத்த
அத்துடன், தொலைத்தொடர்பு நிறுவனம், ஹாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் செய்தித்தாள் நிறுவனம் உள்ளிட்ட செல்வந்த நன்கொடையாளர்களுடன் மூன்று தனித்தனி வழக்குகளில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
பல வருட விசாரணைகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டில் நீதி அமைச்சகம் மூன்று வழக்குகளிலும் குற்றப்பத்திரிகைகளை அறிவித்தது, மேலும் விசாரணை மே 2020 இல் தொடங்கியது.

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள நெதன்யாகு, ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுடனான இஸ்ரேலின் சமீபத்திய போர்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் உறுதிமொழிகள் அல்லது தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டி, தனது சாட்சியத்தை தாமதப்படுத்த பலமுறை முயன்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நெதன்யாகு மீண்டும் பதவிக்கு வந்தது உட்பட, இஸ்ரேலை முடக்கிய பல வருட அரசியல் மந்தநிலையாலும் விசாரணை மெதுவாகிவிட்டது.
காஸா மீதான உக்கிரமானப் போருக்கு காரணம், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பும் நோகமே என இஸ்ரேல் மக்களே வெளிப்படையாக போராட்டத்திலும் இறங்கியிருந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |