பாலஸ்தீன அதிகாரிகளின் விசா ரத்து நடவடிக்கை: அமெரிக்காவுக்கு நெதன்யாகு பாராட்டு!
பாலஸ்தீன அதிகாரிகளின் விசா ரத்து நடவடிக்கைக்கு இஸ்ரேல் பாராட்டு தெரிவித்துள்ளது.
அமெரிக்க விசாக்கள் ரத்து
ஐ,நா பொது கூட்டத்திற்கு முன்னதாக அமெரிக்கா பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அதிரடியாக ரத்து செய்தது.
இந்த நடவடிக்கையின் கீழ் பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பாலஸ்தீன நிர்வாகம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்த கருத்தில், பாலஸ்தீன அதிகாரிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புகளை மோசமாக்கியதற்காகவும் இந்த விசா ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

வயிறு குழுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: தெறிக்கும் மீம்ஸ்கள்!
நெதன்யாகு வரவேற்பு
இந்நிலையில், அமெரிக்காவின் விசா ரத்து முடிவுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதில் விசா ரத்து முடிவு, நெறி சார்ந்த தெளிவு, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு இது தண்டனை அல்ல, சரியான நீதி என X தளத்தில் நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.
அத்துடன் பயங்கரவாதத்திற்கு எந்த பரிசும் கிடையாது, அதைப்போல் காட்டுமிராண்டி தனத்திற்கும் எந்தவொரு வெகுமதியும் இல்லை என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |