இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறாது: ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு
ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
அமைதித் திட்டம்
காஸாவுக்கான அமைதித் திட்டத்தை இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அமைதிக் குழு முன்மொழிந்தது.

ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது எனக் கூறி அதனை நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: 15 அம்சங்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது.
நீங்கள் அதை சொல்லவில்லை என்று சிலர் கூறுவதை நான் கேட்டேன். எனவே அதை நான் மீண்டும் இங்கே கூறுகிறேன். ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் எந்தவொரு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாது" என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |