வெளிநாட்டு படைகளை இஸ்ரேல் தான் தீர்மானிக்கும்! நெதன்யாகு திட்டவட்டம்
காசா போர் நிறுத்த திட்டத்தில் எந்தெந்த நாடுகள் தங்கள் படைகளை அனுப்பலாம் என்று இஸ்ரேல் முடிவு செய்யும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் பன்னாட்டு ராணுவ படை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர முன் முயற்சிகளின் அடிப்படையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்காணிக்கும் பொருட்டு அமெரிக்கா தலைமையில் பன்னாட்டு ராணுவ படை இஸ்ரேலில் களமிறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நெதன்யாகு திட்டவட்டம்
இந்நிலையில் காசா போர் நிறுத்த திட்டத்தில் எந்தெந்த நாடுகள் தங்கள் படைகளை அனுப்பலாம் என்று இஸ்ரேன் தான் முடிவு செய்யும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேல் தங்களுடைய பாதுகாப்பை முழு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும், இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |