இது ஸ்பெயின் நாட்டு கொடியா? விஜயின் கட்சி கொடியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
கட்சி கொடி அறிமுகம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஆகஸ்ட் 22) பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், வாகை பூ நடுவிலும் உள்ளவாறு கட்சியின் கொடி உள்ளது. மேலும், வாகை மலரை கட்சி கொடியில் நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
ஸ்பெயின் நாட்டு கொடி
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதில் பயனர் ஒருவர் ஸ்பெயின் நாட்டு கொடியை போன்று தமிழக வெற்றி கழகத்தின் கொடி இருப்பதாக கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டு கொடியில் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் காணப்பட்டிருக்கும். ஆனால், நடுவில் யானைக்கு பதிலாக மன்னரின் ஆட்சிக்கான சின்னம் இருக்கும்.
ஃபெவிகால் லோகோ
அதேபோல ஃபெவிகால் லோகோவில் இரண்டு யானைகள் நீல நிறத்தில் எதிர் திசையில் இருப்பது போல இருக்கும். ஆனால், தவெக கொடியில் யானைகள் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
கேரளாவின் சின்னம்
கேரளா மாநிலத்தின் சின்னத்தில் இரண்டு யானைகள் தும்பிக்கையை உயர்த்தியவாறு இருக்கும். மேலும், நடுவில் சங்கும் இந்திய அரசின் முத்திரையும் இடம் பெற்றிருக்கும்.
அந்தவகையில், தவெக கொடியில் யானை இடம்பெற்றுள்ளதால் பக்கத்து மாநிலங்களை கிண்டல் செய்ய கூடாது என்று ட்ரோல் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |