புதிய 2025 Hornet 2.0 பைக்கை அறிமுகப்படுத்திய Honda
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட Hornet 2.0 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய 2025 ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கின் விலை ரூ.1,56,953 (ex-showroom) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது இப்போது இந்தியா முழுவதும் உள்ள HMSI Red Wing BigWing டீலர்ஷிப்களில் கிடைக்கிறது.
புதிய Hornet 2.0: வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்
புதிய Hornet 2.0 பைக்கின் பாடி பேனல்கள் கவர்ச்சிகரமான புதிய கிராபிக்ஸ் அம்சங்களை பெற்றுள்ளன. இது all-LED lighting அமைப்பையும் கொண்டுள்ளது.
புதிய ஹார்னெட் 2.0 பைக் Pearl Igneous Black, Radiant Red Metallic, Athletic Blue Metallic மற்றும் Matte Axis Grey Metallic ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
Hornet 2.0 பைக்கில் OBD2B இணக்கமான 184.40cc சிங்கிள்-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8500 RPM-ல் 12.50 kW ஆற்றலையும், 6000 RPM-ல் 15.7 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.
இந்த என்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட வாகனம் சமீபத்திய emission standard-ல் உள்ளது. இது ஒரு assist மற்றும் slipper clutc-hசையும் கொண்டுள்ளது, இது மென்மையான கியர் மாற்றத்தை உறுதி செய்கிறது மற்றும் டவுன்ஷிஃப்டிங்கின் போது பின்புற சக்கரம் Lock-ஆகாமல் தடுக்கிறது.
புதிய ஹார்னெட் 2.0 ஸ்மார்ட்போனில் Bluetooth connectivity-யுடன் கூடிய 4.2-inch TFT display வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் Honda RoadSync app மூலம் navigation support, incoming call alerts, SMS notification access போன்ற வசதிகளும் உள்ளன. கூடுதலாக, இது ஒரு புதிய USB C-type charging port-டையும் கொண்டுள்ளது.
ஹார்னெட் 2.0 Honda Selectable Torque Control (HSTC) மற்றும் dual-channel ABS ஆகிய பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது. இது சிறந்த பிரேக்கிங் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Honda 2025 Hornet 2.0, New Honda Hornet 2.0