நாய்கள் மத்தியில் பரவும் வைரஸ்! மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உண்டா? ஆய்வில் வெளிவந்த பரபரப்பு முடிவுகள்
உலகம் மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில், இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் நாய்களுக்கிடையே வைரஸ் பரவுவதாகவும் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.
ஆய்வு
இதுகுறித்து தென் கொரிய ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு நடத்தியுள்ளனர்.
அதில் தான் டெல்டா உள்ளிட்ட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வேரியண்ட்கள் நாய்களுக்கு இடையே பரவும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாய்கள் மத்தியில் இதுபோன்ற பாதிப்பு கண்டறிவது இதுவே முதல் தடவை எனவும் பீகிள் இன நாய்களுக்கு டெல்டா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்களுக்கு மூக்கு வழியே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவுடன் அவை தனிமைப்படுத்தினர். அதன் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய்கள், பாதிக்காத நாய்களை ஒன்றாக வைத்து ஆய்வு செய்துள்ளனர்.
image - Elias Funez/The Union, via Associated Press
ஆய்வின் முடிவு
ஒரு வாரம் நடத்திய இந்த ஆய்வில் வைரஸ் பாதித்த நாய்கள் மற்றும் வைரஸ் பாதிக்காத நாய்கள் என இரண்டிலும் பெரியளவில் எந்த அறிகுறிகளையும் கண்டறிய முடியவில்லை.
இருப்பினும், 10 நாட்களுக்குப் பிறகு, நாய்களின் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இரு பிரிவு நாய்களின் நுரையீரலிலும் நுண்ணிய புண்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதன் மூலம் நாய்களும் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் அவை நேரடி தொடர்பு மூலம் மற்ற நாய்களுக்குப் பரவும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
ஆய்வாளர்களின் கருத்து
விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு நோய்த்தொற்று பரவல் ஏற்படுவதைத் தடுக்க செல்லப்பிராணிகளுக்கு வேக்சின் அளிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
விலங்குகள் மத்தியில் மீண்டும் மீண்டும் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தென் கொரிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.