அமெரிக்கா - கனடாவை இணைக்கும் புதிய சர்வதேச பாலம்: திறக்கப்படுவது எப்போது?
அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட பாலம் திறப்பு
அமெரிக்காவின் டெட்ராய்ட்(மிச்சிகன்) நகரையும், கனடாவின் வின்ட்சர் (ஒன்ராறியோ) நகரையும் இணைக்கும் பிரம்மாண்ட சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” (Gordie Howe) திட்டமிட்டப்படி ஜூலை 27ம் திகதி திறக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் எந்தவொரு தடையும் ஏற்படாமல் நிறைவேறுவதை உறுதி செய்த புதிய ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

கனடா அரசுக்கு டிரம்ப் கருத்து
சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” தொடர்பான முந்தைய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்ததாகவும், தற்போது திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவும் நியாயமானதாகவும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச பாலமான கார்டி ஹோவ்-விற்கு ஒத்துழைப்பு வழங்கிய கனடா அரசுக்கு நன்றி எனவும், பாலத் திட்டத்தை முன்னெடுத்து சென்று வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சிறப்பான முன்னேற்றத்தின் மூலம் இரண்டு நாடுகளும் தொடர்ந்து பல ஆண்டுகள் வெற்றியை பெறட்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |