ஆப்கானில் புதிய ஆட்சி அமையுமா? தடுமாறும் தாலிபான்கள்.. வெளியான முக்கிய தகவல்
பஞ்சஷீர் பயங்கரவாதிகள் 600 தாலிபான்களை கொலை செய்து குவித்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முக்கிய தலைநகரமான காபூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் வசம் சென்றுள்ளன. இதையடுத்து ஆப்கானில் புதிய ஆட்சியை அமைக்க தாலிபான்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர்.
தாலிபான்களின் தலைவர் யார் என்ற அதிகாரபூர்வ தகவல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புதிய அரசு அமைக்கப்படும் பணியை அடுத்த வாரம் தள்ளிவைப்பதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில் தாலிபான்கள் பஞ்சஷீர் பள்ளத்தாக்கை வென்றதாக கூறி கோலாகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி தாலிபான்கள் கூறியது முற்றிலும் பொய் என்று நிரூபனம் ஆகியுள்ளது.
அதாவது தலீபான்கள் தரப்பில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1000 பேர் பிடிபட்டுள்ளதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த குழப்பமான சூழலில் ஆப்கானில் தாலிபான்கள் நினைத்தது போல புதிய ஆட்சி அமையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதில் யாருடைய கூற்று உண்மை, யாருடைய பொய் என்று இப்போது சொல்ல முடியாது. பஞ்சஷீர் பள்ளத்தாக்கில் தாலிபான்களை தடுத்து நிறுத்துவதில் இன்று வரை வடக்கு கூட்டணி வெற்றி கண்டு வருகிறது. அதனால் மீண்டும் தாலிபான் அரசு புதிய அரசை அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.