UAE -ல் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்.., வெளியான அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய நீல காலர் தொழிலாளர்கள் (Indian blue-collar workers) மற்றும் பிற ஊழியர்களுக்கான வாழ்க்கை பாதுகாப்புத் திட்டம் கிடைக்க வழிவகை செய்துள்ளதாக இந்திய துணை தூதரகம் கூறியுள்ளது.
துபாயில் இயற்கை மரணங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (United Arab Emirates) சுமார் 3.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர், அவர்களில் 65 %பேர் நீல காலர் தொழிலாளர்கள் ( (Indian blue-collar workers) ஆவார். அவர்கள் அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மிகப்பெரிய குழுவில் ஒன்றாகும்.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் பணியாளர்கள் இழப்பீடு ஆகியவற்றின் கீழ் காப்பீடு செய்து வருகின்றன.
இதில், தொழிலாளர்களுக்கு பனியின் போது காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். இருப்பினும், ஊழியர்களின் இயற்கை மரணத்திற்கு காப்பீடு எதுவும் இல்லை.
எனவே இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் இயற்கை மரணம் ஏற்பட்டால் எந்த இழப்பீடும் பெற மாட்டார்கள்.
புதிய காப்பீடு திட்டம்
இதனை கருத்தில் கொண்டு துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம், அங்குள்ள நிறுவனம் மற்றும் காப்பீட்டு வழங்குபவர்களிடம் பேசி இயற்கை மரணங்களுக்கும் இழப்பீடு வழங்கும் ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மார்ச் 1 -ம் திகதியில் இருந்து இந்திய தொழிலாளர்களுக்கு இந்த ஆயுள் பாதுகாப்பு கிடைக்கிறது. இது குறித்து இந்திய தூதரக அதிகாரி சதீஷ் சிவன் கூறுகையில், "துபாயில் கடந்த ஆண்டு உயிரிழந்த 1513 பேர்களில் 1000 பேர் தொழிலாளர்கள் ஆவார். அதிலும், 90 சதவீதம் பேர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர்.
ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் இயற்கை மரண நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இயற்கை மரணம் ஏற்பட்டால் இறந்தவரின் குடும்பத்திற்கு சில நிதிச் சலுகைகளை வழங்குவதற்காக, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அனைத்து நிறுவனங்களையும் சந்தாவைப் பரிசீலிக்க ஊக்குவிக்கிறது. இந்த திட்டம் மார்ச் 1 -ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |