வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாற வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் வரும் நவ15-ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறுகையில்..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் ‘’தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வருகிறது வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
கிழக்கு திசை காட்டிலும் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழகம் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று பகலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே நேரம் வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நவம்பர் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் புயல் வலுப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது படிப்படியாக வடமேற்கில் நகர்ந்து ஆந்திரா அருகே காற்றழுத்த மண்டலமாக மாறி, பின் புயலாக உருவாகி ஆந்திராவில் கரையை கடக்கும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |