புதிய மாருதி சுசுகி Dzire நவம்பர் 11-ஆம் திகதி அறிமுகம்., சன்ரூஃப், 6 ஏர்பேக்குகளுடன் பல அம்சங்கள்
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் செடான் Dzire காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை நவம்பர் 11-ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது.
நான்காம் தலைமுறை Maruti Suzuki Dzire, ஹேட்ச்பேக் மாருதி ஸ்விஃப்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
இந்த கார் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் பல Segment First அம்சங்களுடன் வழங்கப்படும்.
Maruti Suzuki Dzire 5 வகைகளில் வழங்கப்படும் LXI, VXI, VXI(O), ZXI மற்றும் ZXI+. புதுப்பிக்கப்பட்ட மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ .6.99 லட்சத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைர் தற்போது ரூ .6.57 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது Honda Amaze, Hyundai Aura and Tata Tigor போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
இந்த கார் தற்போதைய மாடலில் காணப்படும் K12 நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக, புதிய ஸ்விஃப்ட்டில் வரும் Z-சீரிஸிலிருந்து புதிய 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைப் பெறும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
தற்போதைய மாடல் 90 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். புதிய ஸ்விஃப்ட் காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Next-gen Maruti Suzuki Dzire, Maruti Suzuki Dzire Launch on November 11