போப் பிரான்சிஸ் மரணம்: பொய்த்த ஜோதிடக்கலை நிபுணரின் கருத்து
போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்த நிலையில், அவரைக் குறித்து ஜோதிடக்கலைஞர்கள் கணித்த விடயங்கள் குறித்த செய்திகள் பல வெளியாகிவருகின்றன.
பொய்த்த ஜோதிடக்கலை நிபுணரின் கருத்து
அவற்றில் ஒன்று, போப் பிரான்சிஸைக் குறித்து கணிக்கப்பட்ட கருத்து ஒன்று பலிக்காமல் போனதைக் குறித்த செய்தியாகும்.
புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் கிரெய்க் ஹாமில்ட்டன் பார்க்கர் (Craig Hamilton-Parker) என்பவர், போப் பிரான்சிஸின் மரணம் குறித்து கணித்திருந்தார்.
போப் பிரான்சிஸ், 2024ஆம் ஆண்டு மரணம் அடைவார் என்றும் அவருக்கு பதிலாக புதிய போப் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் 2023ஆம் ஆண்டு கணித்துச் சொல்லியிருந்தார் பார்க்கர்.
ஆனால், அவரது கணிப்பு தவறாகிவிட்டது என்பது நம் அனைவருக்குமே தெரியும். காரணம், நேற்றுதான், அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிதான் போப் பிரான்சிஸ் மரணமடைந்தார்.
ஆக, புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டாலும், பார்க்கரின் கணிப்பு பொய்த்துவிட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |