இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த நாடு! வெளியான முக்கிய தகவல்
துருக்கியில் கொரோனா பரவல் காரணமாக இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் கண்டுபிடித்த கொரோனா வைரஸ் இன்று வரை ஒழிந்தபாடில்லை. பல நாடுகளில் கொரோனா புது புது வைரஸாக உருமாறி மக்களை கொடூரமாக தாக்கி வருகின்றது.
கொரோனா அச்சத்தால் அனைத்து நாடுகளிலும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து துருக்கிக்கு வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை துருக்கி அரசு அறிவித்துள்ளது.
அதாவது துருக்கி வரும் இந்திய பயணிகள் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் 14 நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் பொருந்தும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்
14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.