தீவரமடையும் கொரோனா...பிரபல ஐரோப்பிய நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்! அரசாங்கம் முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடானா போலந்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
போலாந்தில் நவம்பர் முதல் இல்லாத அளிவிற்கு கொரோனா தொற்றின் அதிக புதிய தினசரி எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.
போலந்தில் நாடு முழுவதும் கடைகள் ஹோட்டல்கள், கலாச்சார மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை முதல் 3 வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் பிரித்தானியாவில் தோன்றிய மாறுபட்ட கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதால் தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் கட்டாயம் தேவை என போலந்து சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பிரித்தானியாவில் மாறுபாடு இப்போது 60% க்கும் அதிகமான தொற்றுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலாந்தில் இதுவரை சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 49,000 பேர் பலியாகியுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.