பெண்களுக்கு பர்தா கட்டாயம்.. வகுப்பறையில் திரை: தாலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய கட்டுப்பாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முக்கிய தலைநகரமான காபூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் வசம் சென்றுள்ளன. இதையடுத்து ஆப்கானில் புதிய ஆட்சியை அமைக்க தாலிபான்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த முறை தலிபான் ஆட்சியின் போது பெண்களுக்கு சுதந்திரம் எந்தவிதத்திலும் இல்லாமல் இருந்தது. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்ற சூழல் இருந்தது.
தாலிபான்களின் சட்டத்தை மதிக்காமல் இருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அவர்களே தாமாக முன் வந்து எங்களின் ஆட்சி முன்பு போல் இருக்காது என்று கூறினர்.
பெண் கல்வியை அனுமதிப்போம் என்றனர். இந்நிலையில் பல்கலைகழக வகுப்பறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக அமர வேண்டும். இருவருக்குள் நடுவே திரை கட்டப்பட்டு இருக்கும்.
பெண்கள் எப்போதும் கண்டிப்பாக பர்தா அணிவது அவசியம். பெண்களுக்கு பெண் ஆசிரியர் தான் பாடம் எடுக்க வேண்டும். வகுப்பு முடிந்ததும் முதலில் பெண்கள் தான் வெளியேற வேண்டும்.
அதன் பிறகு 5 நிமிடம் கழித்து தான் ஆண்கள் வெளிவர வேண்டும் என்று பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தாலிபான்கள் பஞ்சஷீர் மாகாணத்தையும் கைப்பற்றி விட்டதால் ஆப்கான் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.