5 முதல் 10 வினாடிகளில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் புதிய தொழில்நுட்பம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் கிட்டத்தட்ட 84.5 மில்லியன் பாதிப்புக்களும், அதில் 1.84 மில்லியன் இறப்புகளும் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், சில நாடுகளில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசிகளை கண்டுபிடித்து, அதனை மக்களுக்கும் செலுத்த தொடங்கியுள்ளது.
ஆனால், ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க அதிக நேரம் எடுக்கிறது. Swab test போன்ற சோதனைகள் மூலம் தொற்று இருப்பதைக் கண்டறிய ஆய்வகத்திற்கு சில மணிநேரங்கள் ஆகும். பிறகு வசிக்கும் இடத்தைப் பொறுத்து, அந்த சோதனை முடிவுகள் பாதிக்கப்பட்டோருக்கு வந்தடைய சில நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட ஆகிறது.
இந்நிலையில், ஒரு துருக்கியில் உள்ள பில்கென்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டயக்னோவிர் (Diagnovir) என்ற புதிய தொற்று கண்டறிதல் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, ஒருவருக்கு கொரோனா வைரஸ் நேர்மறையாக இருந்தால் 10 வினாடிகளில் முடிவைத் தரும் எனக் கூறப்படுகிறது.
இந்த முறையில், ஒரு நபரின் வாயிலிருந்து டெஸ்ட் சாம்பிளை ஒரு துணியால் எடுக்கப்பட்டு, ஒரு கரைசலுடன் கலந்து பின்னர் pathogen detection chip-ல் சேர்க்கப்படும்.