உலகில் மீண்டும் பரவத் துவங்கியுள்ள பயங்கர நோய்! அதிர்ச்சியூட்டும் செய்தி
கோவிடையே மிஞ்சும் அளவுக்கு பயங்கர நோய் ஒன்று உயிர்களை பலிகொண்டுவருவது குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வேளியாகியுள்ளது.
மீண்டும் பரவும் பயங்கர நோய்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஐரோப்பாவில் 1600 முதல் 1800ஆம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் 25 சதவிகித உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்த ஒரு நோய் மீண்டும் பரவத் துவங்கியுள்ளது.
Image: Ian Vogler / Daily Mirror
உலகம் முழுவதும், 20 விநாடிகளுக்கொரு உயிரை பலிகொண்டு வருகிறது அந்த பயங்கர நோய். அது, Tuberculosis அல்லது TB என்று அழைக்கப்படும் காசநோய்.
கோவிட்டையே மிஞ்சிய உயிர்பலி
காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் அந்நோய்க்கான எளிய சிகிச்சை தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுவரும் பிரித்தானிய அறிவியலாளரான பேராசிரியர் Robert Wilkinson, மீண்டும் அதிக உயிர்பலி கொள்ளும் நோயாக காசநோய் மாறப்போவதை தவிர்க்க இயலாது என்கிறார்.
Image: Ian Vogler / Daily Mirror
அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம், 2021இல் காசநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை1.6 மில்லியன் என்கிறது உலக சுகாதார அமைப்பு. 2022இல் அது மேலும் அதிகரித்திருக்கக்கூடும். இந்நிலையில், 2022இல் கோவிடால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.2 மில்லியன் மட்டுமே.
அதாவது, காசநோயால் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட கோவிடால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைவு.
இப்படி மறைமுகமாக பரவிவரும் காசநோய்க்கு சரியான தடுப்பூசி இல்லை. சிகிச்சையைப் பொருத்தவரை, காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிகிச்சையளிக்கவேண்டும்.
Image: Ian Vogler / Daily Mirror
அவர் இடையில் சிகிச்சையை நிறுத்திவிட்டாலோ, நிலைமை மோசமாகிவிடும். பின்னர் இரண்டு ஆண்டுகள் கூட சிகிச்சை தேவைப்படலாம்.
சிலருக்கு, இந்த மருந்துகள் பலனளிப்பது இல்லை. அவர்கள் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிடுகிறார்கள்.
Image: Ian Vogler / Daily Mirror
இந்நிலையில், இந்த பயங்கர உயிர்க்கொல்லி நோயை ஒரே ஊசியில் குணமாக்கும் மருந்தொன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்குமாறு இந்தியா, அமெரிக்கா, வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கர் மற்றும் ஐவரி கோஸ்ட் முதலான நாடுகளின் ஆய்வாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுவருகிறார் பேராசிரியர் Robert Wilkinson.
Image: Ian Vogler / Daily Mirror