பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி! பூங்காவில் கிடந்த மனித உடல் பாகங்களால் பரபரப்பு
அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் கிடந்த மனித உடல் பாகத்தை பள்ளி சிறுமி ஒருவர் கண்டுபிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவில் கிடந்த மனித உடல்
அமெரிக்காவின் நியூயார்க்கில்(New York) உள்ள பாபிலோன் நகரில்(town of Babylon) உள்ள சவுத்ஹார்ட்ஸ் பார்க் குளத்திற்கு(Southards Park Pond) அருகே சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த போது துண்டாக்கப்பட்ட மனிதனின் இடது கை பாகத்தை வியாழக்கிழமை கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தந்தை அப்பகுதியில் சோதனையிட்ட போது துண்டாக்கப்பட்ட மனிதனின் கால் பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
உடனடியாக சிறுமியின் தந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
மீட்கப்பட்ட மீதமுள்ள உடல் பாகம்
இதையடுத்து பார்க்கின் இலை குவியல்களில் இருந்து மீதமுள்ள உடல் பாகங்களை மோப்ப நாய்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் ஆண் ஒருவரின் உடல் பாகமாக இருக்கலாம் என்றும், ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் அனைத்தும் ஒரே நபருடையதா என்று தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |