கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பி கொடுங்கள்: பிரித்தானிய மன்னரிடம் நியூயார்க் மேயர் வேண்டுகோள்
கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பி தருமாறு பிரித்தானிய மன்னர் சார்லஸிடம் கோரிக்கை வைப்பேன் என நியூயார்க் நகர மேயர் மம்தானி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மன்னர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக புதன்கிழமை 9/11 நினைவிடத்திற்கு சென்று மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவர்களுடன் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி உடனிருந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி கடந்த ஜனவரி 1ம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராக பதவியேற்றார்.
தீவிர இடதுசாரி சித்தாந்தம் கொண்ட ஜோஹ்ரான் மம்தானி பிரபல திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகன் ஆவார்.
ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோஹ்ரான் மம்தானி டிரம்பை கடுமையாக விமர்சித்து அமோக ஆதரவை பெற்றார்.
#WATCH | "If I were to speak to the King separately from that, I would probably encourage him to return the Kohinoor diamond," says New York Mayor Zohran Mamdani on meeting King Charles III during the wreath-laying ceremony at the 9/11 memorial in New York.
— ANI (@ANI) April 29, 2026
(Source: Mayor Zohran… pic.twitter.com/EExmI1ypqA
இந்நிலையில் மன்னர் சார்லஸை தனிப்பட்ட முறையில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் என்ன கேட்பீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜோஹ்ரான் மம்தானி, இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை திருப்பி தருமாறு நான் அவரிடம் வலியுறுத்தி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |