இந்தியர்களை கனடா வழியாக கடத்த உதவிய அமெரிக்கப் பெண் கைது
கனடா வழியாக இந்தியர்களை அமெரிக்காவுக்குள் கடத்த உதவியதாக, அமெரிக்கப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியர்களை கடத்த உதவிய அமெரிக்கப் பெண்
நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்டேசி டெய்லர் (42) என்னும் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளவர் ஆவார்.
ஜனவரி மாதம், கனடாவின் கியூபெக்குக்கும், நியூயார்க்கிலுள்ள Churubusco என்னுமிடத்துக்கும் இடையில் அமைந்துள்ள கனடா அமெரிக்க எல்லை வழியாக ஸ்டேசியின் கார் அமெரிக்காவுக்குள் நுழையும்போது, அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள்.
அப்போது அவரது காருக்குள் மூன்று இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவருமே சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
பின்னர் ஸ்டேசியின் மொபைலை பரிசோதித்தபோது, அவருக்கும் வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்குள் கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும், அவர் ஏற்கனவே பலரை அமெரிக்காவுக்குள் கடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஸ்டேசி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு, அவர் கடத்திய ஒவ்வொரு ஆளுக்கும் ஐந்து ஆண்டுகள் வீதம் கணக்கிட்டு, அதற்கேற்ப சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |