வீணான ஹாரி புரூக்கின் சதம்: முதல் அடி கொடுத்த நியூசிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹாரி புரூக் சதம்
பே ஓவல் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. 
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது.
ஸகாரி ஃபௌக்ஸ், ஜேக்கப் டுஃபி, ஹென்றி ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 223 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கடைசிவரை போராடி சதம் அடித்த அணித்தலைவர் ஹாரி புரூக் (Harry Brook) 101 பந்துகளில் 135 ஓட்டங்கள் விளாசினார்.
நியூசிலாந்து வெற்றி
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் என தடுமாறியது. எனினும் மைக்கேல் பிரேஸ்வெல் அபாரமாக அடி அரைசதம் அடித்தார். அவர் 51 பந்துகளில் 51 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள்) எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆனார்.
அடுத்து வந்த மிட்சேல் சாண்ட்னர் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேர்ல் மிட்சேல் (Daryl Mitchell), ஆட்டமிழக்காமல் 78 (91) ஓட்டங்கள் குவிக்க நியூசிலாந்து அணி 36.4 ஓவர்களில் 224 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் பிரைடோன் கார்ஸ் (Brydon Carse) 3 விக்கெட்டுகளும், லுக் வுட் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்திற்கு முதல் அடி கொடுத்துள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |